கோத்தகிாி-குன்னூர் சாலையில் குட்டிகளுடன் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிாி குன்னூர் சாலையில் குட்டிகளுடன் உலா வந்த கரடி தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து குட்டிகளுக்குப் பழம் பறிக்க மரத்தில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிாி குன்னூர் சாலையில் குட்டிகளுடன் உலா வந்த கரடி தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து குட்டிகளுக்குப் பழம் பறிக்க மரத்தில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, தேயிலைத் தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் அடிக்கடி கரடிகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த இரண்டு மாத காலமாக கோத்தகிரி குன்னூர் சாலையில் உள்ள அரவேணு அளக்கரை பகுதிகளில் கரடி இரண்டு குட்டிகளுடன் உலா வருகிறது.

இந்த நிலையில், அரவேணு சாலையில் கரடி ஒன்று குட்டியுடன் உணவிற்காக சாலையில் உலா வந்தது. பின்னர், தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்தது உணவிற்காக மரத்தில் ஏறி குட்டிகளுக்கு பழம் பறிக்க முயன்றது. அது முடியாமல் போகவே மீண்டும் மரத்தில் இருந்து கீழே இறங்கியது. இதனை அவ்வழியாக வந்த வாகன ஒட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். பின்னர், 30 நிமிடங்கள் கழித்து கரடி குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...