கூடலூரில் வீட்டை தரைமட்டமாக்கிய ஒற்றை யானை; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பாடந்துறை பகுதியில் பொன்வயல் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஜெயலட்சுமி என்பவர் தனது தாய் மாதவி மற்றும் சித்தப்பா மகன் அரவிந்தன் ஆகியோருடன் வசித்து வருகின்றார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பாடந்துறை பகுதியில் பொன்வயல் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஜெயலட்சுமி என்பவர் தனது தாய் மாதவி மற்றும் சித்தப்பா மகன் அரவிந்தன் ஆகியோருடன் வசித்து வருகின்றார்.

இவரது வீட்டிற்கு நேற்று நள்ளிரவில் வந்த ஒற்றை யானை வீட்டை முழுவதுமாக இடித்துச் சேதப்படுத்தி உள்ளது. மேலும், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இதே யானை அந்த வீட்டின் ஒரு பகுதி சுவரை இரவு நேரத்தில் இடித்தது. அப்போது அந்த அறையில் இருந்த மாதவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்நிலையில், நேற்று இரவு யானை மீண்டும் வீட்டைச் சேதப்படுத்திய போது, ஏற்கெனவே இந்த வீட்டின் ஒரு பக்கச் சுவரை யானை இடித்துத் தள்ளிய நிலையில் நேற்று இரண்டாவது முறையாக முழுவதுமாக சேதப்படுத்தி உள்ளதால் இவர்கள் தற்போது முழு வீட்டை இழந்துள்ளனர்.

இதனால் கூலி வேலை செய்து பிழைத்து வரும் ஜெயலலட்சுமி குடும்பத்தினர் தங்குவதற்கு இடம் இல்லாத நிலையில் தவித்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இப்பகுதியில் இரவு நேரத்தில் சுற்றி வரும் ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...