கோவை : கோவையில் தனியார் உணவக அரங்கில் இந்திய ஐவுளி கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று, செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெற்றது.
கோவை : கோவையில் தனியார் உணவக அரங்கில் இந்திய ஐவுளி கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று, செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜவுளித்துறை சார்ந்த அனைத்து தொழில் அமைப்புகளும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் இந்திய ஜவுளி கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில் :
ஜவுளிதுறையில் உள்ள அனைத்து சங்கங்களுக்கும் என்ன தேவை என்பது குறித்து ஆலோசித்து ஓரே மனுவாக கொண்டு வர மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாகவும் அதன் அடிப்படையில் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.

பொதுவான கோரிக்கைகளை அடுத்த வாரம் மத்திய நிதியமைச்சரை நேரில் சந்தித்து தெரிவிக்க இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். முக்கியமாக கடன் சீரமைப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த இருக்கின்றோம் என தெரிவித்த அவர், இதே போன்று 3 மாதத்திற்கு ஒரு முறை ஜவுளித்துறை சார்ந்த அனைத்து அமைப்புகளும் ஓன்று கூடி விவாதிக்க இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி , ஜி.எஸ்.டி என தனித்தனியாக முன்று முக்கிய கோரிக்கைகளை தனித்தனியாக வலியுறுத்த இருக்கின்றோம் என கூறிய அவர், துணி, நூல் ஏற்றுமதியை ஊக்குவிக்க சில சலுகைகளை கேட்க இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழக மின்துறை அமைச்சரை சந்தித்து சில கோரிக்கைகளை வைக்க இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
ஓரு மெகாவாட்டிற்கு மேல் காற்றாலை மின் உற்பத்தி இருந்தால் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற விதிமுறை குறித்து ஆலோசனை செய்வோம் எனவும் ராஜ்குமார் தெரிவித்தார்.
தொழில் துறையை சேர்ந்த கூட்டம் என்றாலும் ஜவுளித்துறை முன்னேற்றம் சார்ந்த விஷயங்களில் பா.ஜ.கவை சேர்ந்த வானதி சீனிவாசன் ஆர்வம் காட்டுகின்றார் என்பதால் அவரை இந்த கூட்டத்திற்கு அழைத்து இருந்தாகவும், இதில் வேறு எதுவும் காரணம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

எங்களது கோரிக்கையினை வானதி சீனிவாசன் அவர்கள் மத்திய அரசிடம் கொண்டு செல்ல உதவுவார் என தெரிவித்த ராஜ்குமார் விசைத்தறிக்கு உள்ள ஜி.எஸ்.டி பிரச்சினையை சரி செய்ய வேண்டும், கடன் மறுசீரமைப்பு செய்ய வேண்டும், செஸ்வரியை எடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வியட்நாமில் இருந்து நூல் சீனாவிற்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்ற நிலையில், இந்தியாவில் இருந்து வியட்நாமிற்கு நூல் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் ராஜ்குமார் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஜவுளித்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.