மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் போராட்டம்

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்தும் நகர பகுதிகளில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றப்படாமல் இருப்பது குறித்தும் தெருவிளக்குகள் எல்பராமரிப்பு இன்றி இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தி.மு.க சார்பில் அதன் தோழமை கட்சியினருடன் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்தும் நகர பகுதிகளில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றப்படாமல் இருப்பது குறித்தும் தெருவிளக்குகள் எல்பராமரிப்பு இன்றி இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தி.மு.க சார்பில் அதன் தோழமை கட்சியினருடன் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பவானி ஆறு பாய்ந்தோடும் மேட்டுப்பாளையம் நகரப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கபடாமல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படு வருவதாகவும் தெருவிளக்குகள் பராமரிப்பு இன்றி இருப்பதால் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதுடன் பாதாள சாக்கடை திட்டங்களுக்கு தோண்டிய குழிகள் முறையாக மூடப்படாமல் இருப்பதால் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது, என போராட்டத்தின் போது குற்றம் சாட்டினர். 

சாக்கடை தூறுவராமல் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு டெங்கு உள்ளிட்ட நோய்தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதையொட்டி, செயல்படாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஒன்றினைந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

கோவை தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோசங்களை எழுப்பி தி.மு.கவினர் ஆளும் கட்சிக்கு ஏற்ற தலையாட்டி பொம்மைகளாக இல்லாமல் அதிகாரிகள் விரைந்து பணியாற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். இந்த மாதத்திற்குள் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு ஏற்படாவிட்டால் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் கழக தோழர்களுடன் பொதுமக்களை ஒன்றினைத்து தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர். 



பின்னர் நகராட்சி ஆணையரை சந்தித்து பணிகளை விரைவாக முடிக்க கோரி மனு அளித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...