திருப்பூரில் கடன் பிரச்சனை காரணமாக பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தவர் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர் : திருப்பூரில் பின்னலாடை தொழில் நலிவடைந்து அதன் காரணமாக சிறிய அளவில் நிறுவனம் நடத்தி வந்தவர் நிறுவனத்திலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் : திருப்பூரில் பின்னலாடை தொழில் நலிவடைந்து அதன் காரணமாக சிறிய அளவில் நிறுவனம் நடத்தி வந்தவர் நிறுவனத்திலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காஜா உசேன் இவர் திருப்பூர் வள்ளியம்மை நகர் பகுதியில் சிறிய அளவில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகையால் தொழில் நலிவடைந்த சூழ்நிலையில், தற்போது சொந்தமாக நிறுவனம் நடத்துவதைக் கைவிட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியினை மேற்கொண்டு வந்தார். 

இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணி மேற்கொண்டதிலும் தனக்குத் தேவையான அளவு ஆர்டர் கிடைக்காத விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

மேலும், வெளியில் கடன் பெற்று தொழில் நடத்தி வந்த சூழ்நிலையில், தற்போது கடன் கட்டமுடியாத நிலையில் விரக்தி அடைந்த காஜா உசேன் நேற்று இரவு வள்ளியம்மை நகர் பகுதியில் உள்ள தனது நிறுவனத்திலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இன்று காலை காஜா உசேன் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்ததை அடுத்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...