கோவை : கடந்த 2013ம் ஆண்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள ரஹேஜா அடுக்குமாடி குடியிருப்பில், பெண்ணை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த வழக்கில் குற்றவாளி யாசர் அரபாத்துக்கு தூக்கு தண்டனை விதித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி பூரண ஜெயஆனந்த், தடயங்களை அழிக்க முற்பட்டதற்கு 7 ஆண்டு சிறையும் ரூ.10 ஆயிரமும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதற்கு 7 ஆண்டு சிறையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
கோவை : கடந்த 2013ம் ஆண்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள ரஹேஜா அடுக்குமாடி குடியிருப்பில், பெண்ணை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த வழக்கில் குற்றவாளி யாசர் அரபாத்துக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி பூரண ஜெயஆனந்த் தீர்ப்பளித்தார்.
கோவை அவிநாசிரோடு, ரஹேஜா அடுக்குமாடி குடியிருப்பில், குடும்பத்துடன் வசித்தவர் சரோஜினி (54). இந்நிலையில், 12 சவரன் நகையை திருட முயன்ற கொள்ளையன், வீட்டில் இருந்த சரோஜினியை கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வைத்துள்ளான். தொடைப் பகுதியை சூட்கேசில் வைக்க முடியாததால், சிமென்ட் பூசி, அவற்றை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு, பரண் மீது வைத்துள்ளான். சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவரது சடலத்தை கண்டுபிடித்த போலீசார், ஏழு துண்டுகளாக கை, கால்கள் மற்றும் உடல் உறுப்புகள் கைப்பற்றப்பற்றினர். துர்நாற்றம் வீசாமல் இருக்க, உடல் உறுப்புகள் மீது சிமெண்ட் பூசப்பட்டிருந்தது.
விசாரணையில், அந்த வீட்டில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த, யாசர் அராபத் (33), என்பவன், வசித்து வந்தது தெரிய வந்தது. ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு, தலைமறைவான, யாசர் அராபத்தை, போலீசார் தேடி வந்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் லாட்ஜில், தங்கியிருந்த யாசர் அராபத்தை, கடந்த, 2ம் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர், நேற்று முன்தினம் இரவு, கோவைக்கு அழைத்து வந்து, அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, நேற்று மாலை, 3:30 மணிக்கு, கோவை, ஜே.எம்., 3 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், கணேஷ்பாபு, வரும்,18ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
போலீசார், சிறைக்காவல் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர். மாஜிஸ்திரேட், போலீசாரின் மனுவை ஏற்காமல், மனுவை, இன்று தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டதால், குற்றம்சாட்டப்பட்ட யாசர் அராபத்தை, கோவை மத்திய சிறையில் அடைக்க, பாதுகாப்பாக, போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், குற்றவாளி யாசர் அரபாத்துக்கு தூக்கு தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி பூரண ஜெயஆனந்த் தீர்ப்பளித்தார். மேலும், தடயங்களை அழிக்க முற்பட்டதற்கு 7 ஆண்டு சிறையும் ரூ.10 ஆயிரமும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதற்கு 7 ஆண்டு சிறையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.