கௌரவ கொலை செய்து விடுவதாக மிரட்டும் பெற்றோர் ; பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் திருநங்கை மனு

கோவை : கௌரவ கொலை செய்து விடுவதாக மிரட்டும் பெற்றோரிடம் இருந்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பி்டெக் படித்த திருநங்கை சீமாட்சி என்பவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தார்.

கோவை : கௌரவ கொலை செய்து விடுவதாக மிரட்டும் பெற்றோரிடம் இருந்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பி்டெக் படித்த திருநங்கை சீமாட்சி என்பவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தார்.

கோவை விளாங்குறிச்சியை சேர்ந்த பிடெக் பட்டதாரியான சதீஷ்குமார், சிங்கப்பூருக்கு வேலை சென்ற போது அங்கு அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறி தனது பெயரை சீமாட்சி என மாற்றிக்கொண்டார். சதீஷ்குமார் பெண்ணாக மாறியதை அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து தனது தந்தை உத்தமன், தாய் மல்லிகா ஆகியோருக்கு தொடர்ந்து பணம் அனுப்பி வந்த திருநங்கை சீமாட்சி, கடந்த 2013ல் இந்தியா திரும்பி உத்திரகான்ட் மாநிலத்தில் திரேந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கணவர் திரேந்திர குமார் இறந்து விடவே திருநங்கை சீமாட்சி சமீபத்தில் கோவை விளாங்குறிச்சி திரும்பினார். விளாங்குறிச்சியில் உள்ள பூர்வீக வீட்டிற்கு வந்த சீமாட்சியை அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்தாக கூறப்படுகின்றது. இதனையடுத்து, விளாங்குறிச்சி அம்பேத்கர் நகரி்ல் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் ஆதரவு கேட்டு தஞ்சம் அடைந்த சீமாட்சியை அவரது பெற்றோரும் உறவினர்களும் அங்கு வந்தும் அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகின்றது.



இதனையடுத்து இன்று திருநங்கை சீமாட்சி தனது பெற்றோர் மீது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு பேட்டியளித்த அவர், தனது முடியை வெட்டி அடித்துத் துன்புறுத்தியதுடன், கௌரவ கொலை செய்து விடுவதாக பெற்றோர் மிரட்டுவதாகத் திருநங்கை சீமாட்சி தெரிவித்தார்.

மேலும், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் விளாங்குறிச்சியில் உள்ள பூர்வீக வீட்டில் வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகக் கூறிய திருநங்கை சீமாட்சி, பாதுகாப்பான வாழ்விற்கு மாவட்ட ஆட்சியர் உதவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...