கோவை : உயர் பாதுகாப்புடைய கோவை மத்திய சிறையில் பத்தாம் பிளாக்கில் உள்ள கைதிகளிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 10 மத்திய சிறை, மூன்று பெண்கள் சிறப்பு சிறை, 12 சீர்திருத்தப்பள்ளி, ஐந்து சிறப்பு கிளை சிறை, ஒன்பது மாவட்ட சிறை, 94 கிளை சிறை, இரண்டு திறந்த வெளி சிறை என, மொத்தம், 134 சிறைகள் செயல்படுகின்றன.
இந்த சிறைகளில் தண்டனை கைதி, விசாரணை கைதி, குண்டர் தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு, வெடிகுண்டு வழக்கில் கைதான கைதி ,மாவோயிஸ்ட் போன்ற பல ஆயிரக்கணக்கான கைதிகள் உள்ளனர்.
இந்த சிறைகளில் சிறைவாசிகள் விதிகளுக்கு அப்பாற்பட்டு பீடி, சிகரெட், ஹான்ஸ், குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்கள் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், இது தொடர்பான தகவல்கள் சிறைத்துறை விஜிலன்ஸ் மற்றும் உளவு பிரிவு போலீசாரின் மூலம் அரசின் கவனத்திற்கு செல்கிறது.
பின்னர், திடீரென காவல்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டு சட்டவிரோதமான பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
ஆனால் என்னதான் அதிகாரிகள் திடீர் சோதனைகள் மேற்கொண்டாலும் சிறையில் எந்த மாற்றங்களும் வருவதில்லை. தொடர்ந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் வலிமையுடைய சிறைவாசிகளுக்குப் பகிரப்பட்டு தான் வருகிறது.
கோவை மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலர்களின் சட்டவிரோத செயல்கள் ;
கோவை மத்திய சிறையை பொறுத்தவரை பீடி, சிகரெட், கஞ்சா, செல்போன் போன்ற அனைத்து தடைசெய்யப்பட்ட பொருட்களும் இரண்டாம் நிலை காவலர்கள் மூலம் கைதிகளுக்கு வழங்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்ததையடுத்து குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறைத்துறை நிர்வாகமே, சிறையில் உள்ள இரண்டாம் நிலை காவலர்களின் சட்ட விரோத நடவடிக்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதேபோல, தகாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்திட சம்பந்தப்பட்டவர்களை அறிவுறுத்துவதுடன், தவறும்பட்சத்தில் தக்க ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எழுத்து வடிவில் அறிவிப்பு பலகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் அறிவிப்பு வெளியிட்டும் சிறையில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் குறைந்தபாடில்லை.
வாடனின் செயலும் சிறைத்துறையின் நடவடிக்கையும் ;
கோவை மத்திய சிறையில் கைதிகள் கஞ்சா பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகியது. இப்படியிருக்க, கடந்த 17ஆம் தேதி சிறைக்குள் கஞ்சா பொருட்களை சட்டவிரோதமாக உள்ளே கொண்டு சென்ற கிருஷ்ணமூர்த்தி என்ற வாடனை சிறைத்துறை நிர்வாகம் கையும் களவுமாக பிடித்தது. இதைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சிறைக்குள் செல்போன்கள் பறிமுதல் ;
சிறைக்குள் செல்போன் உள்ளிட்ட தகவல் பரிமாற்ற பொருட்கள் வைத்திருப்பதால் குற்றங்கள் அதிகரிக்கிறது. அதேபோல கைதிகள் சிறையில் இருந்தபடி வெளியில் இருக்கும் குற்றவாளிகளை தொடர்புகொண்டு குற்றங்களில் ஈடுபட தூண்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியது.
இதனால் மாநகர காவல் துறையும் சிறைத்துறை நிர்வாகமும் திடீரென சிறையில் செல்போன் பயன்பாடுகள் உள்ளதா என்ற கோணங்களில் சோதனைகளில் ஈடுபடுவது வழக்கம்.
இந்தநிலையில், நேற்று சிறையில் உள்ள பத்தாம் பிளாக்கில் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டு வந்த 7 செல்போன்கள் சிறை துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து செல்போன் வைத்திருந்த கைதிகளிடம் யார் மூலம் சிறைக்குள் செல்போன் கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல சிறையில் ஜாமர் இருக்கும் பொழுது கைதிகள் எப்படி ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வியும் இந்த செல்போன் பறிமுதலில் எழுந்துள்ளது.
இந்த விசாரணைகளின் முடிவில் கைதிகள் மீதும் செல்போனை சட்டவிரோதமாக உள்ளே கொண்டுவர உதவியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உயர் பாதுகாப்புக்குரிய கோவை மத்திய சிறையில் சிறைத்துறை விஜிலென்ஸ் போன்ற உளவு பிரிவுகள் இல்லாதது குற்றங்களை அதிகரிக்கச் செய்கிறது என காவல்துறை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஆகவே முறையாக உளவுப்பிரிவுகள் மூலம் தொடர்ந்து கண்காணித்து சிறையில் நடைபெறும் சட்ட விரோத செயல்களை தடுக்க சிறைத்துறை நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.