2013ல் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணை கொலை செய்து உடலை வெட்டி சூட்கேசில் அடைத்த வழக்கில் இன்று மாலை தீர்ப்பு

கோவை : கடந்த 2013ம் ஆண்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள ரஹேஜா அடுக்குமாடி குடியிருப்பில், சரோஜினி (54) என்பவர் கொலை செய்யப்பட்டு, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த வழக்கில், கைது செய்யப்பட்ட யாசர் அரபாத் குற்றவாளி என தீர்ப்பளித்த கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பூரண ஜெயஆனந்த் தீர்ப்பு, தண்டனை விபரம் இன்று மாலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


கோவை : கடந்த 2013ம் ஆண்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள ரஹேஜா அடுக்குமாடி குடியிருப்பில், சரோஜினி (54) என்பவர் கொலை செய்யப்பட்டு, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த வழக்கில், கைது செய்யப்பட்ட யாசர் அரபாத் குற்றவாளி என தீர்ப்பளித்த கோவை 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பூரண ஜெயஆனந்த் தீர்ப்பு, தண்டனை விபரம் இன்று மாலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசிரோடு, ரஹேஜா அடுக்குமாடி குடியிருப்பில், குடும்பத்துடன் வசித்தவர் சரோஜினி (54). இந்நிலையில், எதிர்வீட்டில், துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இவரது சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர். இரண்டு சூட்கேஸ்களில், ஏழு துண்டுகளாக கை, கால்கள் மற்றும் உடல் உறுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. துர்நாற்றம் வீசாமல் இருக்க, சிமெண்ட் பூசப்பட்டிருந்தது.

விசாரணையில், அந்த வீட்டில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த, யாசர் அராபத் (33), என்பவன், வசித்து வந்தது தெரிய வந்தது. ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு, தலைமறைவான, யாசர் அராபத்தை, போலீசார் தேடி வந்தனர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் லாட்ஜில், தங்கியிருந்த யாசர் அராபத்தை, கடந்த, 2ம் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர், நேற்று முன்தினம் இரவு, கோவைக்கு அழைத்து வந்து, அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, நேற்று மாலை, 3:30 மணிக்கு, கோவை, ஜே.எம்., 3 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், கணேஷ்பாபு, வரும்,18ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், தண்டனை விபரம் இன்று மாலை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

போலீசார், சிறைக்காவல் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர். மாஜிஸ்திரேட், போலீசாரின் மனுவை ஏற்காமல், மனுவை, இன்று தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டதால், குற்றம்சாட்டப்பட்ட யாசர் அராபத்தை, கோவை மத்திய சிறையில் அடைக்க, பாதுகாப்பாக, போலீசார் அழைத்துச் சென்றனர்.

கத்தியால் கூறு போட்ட பின்னணி?

கைது செய்யப்பட்ட யாசர் அராபத், ஆடுகளை வெட்டுவதில் கை தேர்ந்தவன். இதன் காரணமாகவே, சரோஜினியின் சடலத்தை, துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டுள்ளான். தொடர்ந்து, தான் புதிதாக வாங்கி வந்த சூட்கேஸ்களில் வெட்டிய தலை, கை, கால்களை அடைத்துள்ளான். தொடைப் பகுதியை சூட்கேசில் வைக்க முடியாததால், சிமென்ட் பூசி, அவற்றை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு, பரண் மீது வைத்து விட்டான். மூன்று நாட்களுக்கு பின், வீட்டுக்குள் இருந்து, துர்நாற்றம் வீசுவதாக, குடியிருப்பு வாசிகள் போலீசாரிடம் தெரிவித்ததையடுத்து, அங்கு சென்ற போலீசார், வீட்டினுள் துர்நாற்றம் வந்த பரணில், அழுகிய நிலையில் இருந்த இரண்டு தொடை பாகங்களை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு அனுப்பினர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...