கோவை : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஊர்காவல் படையினருக்கு கோவையை தலைமையிடமாக கொண்டு வாலண்டியர் (volunteer) ஊர்காவல் படை சூலூர் முத்துகவுண்டன் புதூர் குரும்பபாளையத்தில் நலசங்கம் செயல்படும், என கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அச்சங்கத்தின் தமிழக தலைவர் ஜேசு தனபால் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில் இச்சங்கத்தின் முதன்மை நோக்கம் பொதுமக்களிடையே சாலை விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மர வளர்ப்பை ஊக்குவிப்பது பேரிடர் காலங்களில் ஊர்காவல் படையினர் பங்கேற்று உதவுவது உள்ளிட்ட செயல்களில் இச்சங்கம் தன்னை ஈடுபடுத்தி கொள்ளும் என்றார்.
ஆந்திரா, டெல்லி, ஹதராபாத், ம.பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலத்தில் ஊர்காவல் படை நலசங்கம் உள்ளது என்றவர் தமிழகத்தில் கோவையை தலைமையிடமாக கொண்டு ஆரம்பித்து உள்ளதாகவும் தமிழகம் முழுவதும் 18,000 பேர் உள்ளனர் என்றார்.
கோவை மாவட்டத்தில் 500 பேர் ஊர்காவல் படையில் பணியாற்றுவதாக தெரிவித்த அவர், முன்னர் 26 நாட்கள் பணிக்கு நாள் ஒன்றுக்கு 150 வீதம் வழங்கபட்டு வந்ததாகவும் தற்போது ஐந்து நாட்கள் பணிக்கு நாள் ஒன்றுக்கு 560 வழங்கபடுவதாக தெரிவித்தார்.
காவல்துறையினருக்கு வழங்கபடுவது போல தங்களுக்கு உடைகள் வழங்கபடுவதாகவும் சாலை பாதுகாப்பு, திருவிழா காலங்ம், தலைவர்கள் வருகை போன்ற நேரங்களில் தங்களது பணி இருக்கும் என தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் இச்சங்கம் துவக்கபட்டதாகவும் தற்போது வரை 40 பேர் உறுப்பினராக இணைத்து கொண்டு உள்ளனர் எனவும் வரும் காலங்களில் பெரும்பாலானோர் உறுப்பினர்களாக இணைத்து கொள்வார்கள் என தெரிவித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஊர்காவல் படை நலசங்கத்தின் செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் பாண்டியன், இணை செயலாளர் சுகுமார், உறுப்பினர் மாரிமுத்து உடன் இருந்தனர்.