கோவை : விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து அனைத்து ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

மத்திய அரசானது இந்திய விமானநிலையங்கள் ஆணைக் குழுமங்களுக்கு (Airports Authority of India - AAI) சொந்தமான விமானநிலையங்களை தனியார் மயமாக்கி வருகின்றது. ஏற்கனவே அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், ஹவுஹாத்தி, மங்களூரு மற்றும் திருவனந்தபுரம் விமானநிலையங்களை தனியார் மயமாக்கும் பொருட்டு, விமானத்துறைக்கு சிறிதும் சம்பந்தமோ தொடர்போ இல்லாத அதானி குழுமம் என்ற ஒற்றை நிறுவனத்திற்கு தாரை வார்த்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அமிர்தசரஸ், புவனேஸ்வரம், கோயம்புத்தூர், இந்தூர், கோழிக்கோடு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் வாரணாசி ஆகிய 10 இந்திய விமான நிலையங்கள் ஆணைக்குழுமங்களுக்கு சொந்தமான விமானநிலையங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது, என இந்திய விமான நிலைய ஆணைக்குழும ஊழியர்கள் குற்றம் சாட்டினார்.
மேலும், இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் தூணான பொதுத்துறை நிறுவனங்களை (Public Sector Undertakings - PSU) சிதைக்கும் முயற்சியில், மத்திய அரசு செயல்பட்டு வருவதை கண்டிக்கும் விதத்தில், இந்திய விமான நிலைய ஆணைக்குழும ஊழியர்கள் , இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், என தெரிவித்தனர்.
இந்த போக்கை கண்டித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து, மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு தனியார் மயமாக்கலை நிறுத்தவில்லை என்றால், அடுத்த கட்டமாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அக்டோபர் 16 ஆம் தேதியன்று போராட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் சாகும் வரை தொடர் போராட்டம் நடத்த இருப்பதாக கோவை விமான நிலைய ஊழியர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
மேலும், இந்திய விமான நிலைய ஆணையக்குழு ஊழியர்கள் சார்பாக டெல்லி மற்றும் பம்பாய் விமான நிலையங்கள் தனியாருக்கு கொடுக்க முயற்சிக்கும் போதே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இந்திய விமான நிலைய ஆணையக்குழுவிற்கு சொந்தமான எந்த ஒரு விமான நிலையத்தையும் தனியார் மயமாக்கக் கூடாது, என உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
புதிதாக கட்டப்படும் விமான நிலையங்களை தனியார் மயமாக்கலை எதிர்க்கவில்லை எனவும் , இந்திய விமான நிலைய ஆணையக்குழுவிற்கு சொந்தமான விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதைதான் எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தனர்.