கோவை : கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர் திடீர் மாரடைப்பினால் மருத்துவமனையிலேயே மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

கோவை சாய்பாபா காலனி, அழகேசன் சாலையில் வசித்து வருபவர் பழனிச்சாமி (49). இவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நான்கு வருடங்களாக இயன்முறை மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் மருத்துவர் பழனிச்சாமி இன்று வழக்கம்போல மருத்துவமனைக்கு பணிக்கு வந்தார். அப்பொழுது மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி தரையில் விழுந்தார்.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மருத்துவர் பழனிச்சாமி மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
சக மருத்துவர் ஒருவர் மருத்துவமனையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.