முழு அடைப்பு போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை; சட்டவிதிகளை பின்பற்றுவோம் - நா. கார்த்திக்

கோவை : முழு அடைப்பு போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு திமுக கூட்டணி கட்சிகள் செயல்படும், எனவும் சட்டவிதிகளை பின்பற்றுவோம் என திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாநகர் மாவட்ட பொறுப்பாளருமான நா கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கோவை : முழு அடைப்பு போராட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு திமுக கூட்டணி கட்சிகள் செயல்படும், எனவும் சட்டவிதிகளை பின்பற்றுவோம் என திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாநகர் மாவட்ட பொறுப்பாளருமான நா கார்த்திக் தெரிவித்துள்ளார்.

கோவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்தார். 



அப்போது, பேசிய அவர், கோவை மாநகராட்சி நிர்வாகம் வரி சீராய்வு என்ற பெயரில் சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் இணைப்புக்கு மீண்டும் வரி வசூல் செய்கின்றனர் என குற்றம் சாட்டினார். 

மேலும், சூயஸ் நிறுவனத்துடன் 26 ஆண்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. இவற்றை ரத்து செய்ய வேண்டும் என பொது மக்கள் கேட்டதற்கு இணங்க, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், 

இன்று நீதி மன்றம் முழு அடைப்பு போராட்டத்திற்கு தடை விதித்துள்ளது். 



நீதிமன்ற அறிவிப்புக்கு பின்னர் கடைகளை மூட சொல்லி கேட்க மாட்டோம் என தெரிவித்த அவர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம் என தெரிவித்தார். மேலும, இந்த பிரச்சினையை கையாள்வது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அறிவுரை பெற்று சட்டரீதியாக இதை எதிர் கொண்டு செயல்படுவோம் என தெரிவித்த நா. கார்த்திக், மக்கள் கடைகளை மூடினால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது எனவும் தெரிவித்தார்.



அதே வேளையில் நீதிமன்ற உத்திரவு கிடைத்த பின்பு அது குறித்து கூட்டணி கட்சிகள், வழகறிஞர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...