திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த கே.எஸ்.பழனிசாமி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டதையடுத்து தமிழ்நாடு நகரியல் பயிற்சி மைய இயக்குனராக இருந்த கே.விஜயகார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட புதிய கலெக்டராக இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்துப் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தமிழக அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய விரைந்து பணியாற்றிடுவேன் எனவும் அதேபோல் பொதுமக்கள் தங்கள் பொதுப் பிரச்சனைக்காக எந்த நேரமும் தன்னை அணுகலாம் எனவும் பேட்டியளித்தார்.