கோவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் 5 வயது சிறுமி பலி

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலியின் ஐந்து வயது மகள் ரம்ஜான் பாத்திமா கடந்த 18ம் தேதி டெங்கு காய்ச்சல் பாதிப்பில் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக 19ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, உடல்நிலை மோசமாகிய நிலையில் கடந்த 23ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று ( செப்டம்பர் 24, அதிகாலை ஒரு மணியளவில் சிறுமியின் உடல்நிலை மோசமானதையடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுமி டெங்கு காய்ச்சல் பாதிப்பில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்.

இதையடுத்து, சுகாதாரத்துறை தனது பல்வேறு கட்ட முயற்சிகளின் மூலம் காய்ச்சல்கள் பரவுவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது. மேலும், காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது.

கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருவதையடுத்து டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலின் தாக்கங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

இந்த காய்ச்சல் பாதிப்புகள் மற்றும் காய்ச்சலினால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விவரங்கள் ஏதும் வெளியில் வருவதில்லை எனவும் குறிப்பாக டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் தகவல்களை மாநகராட்சி அதிகாரிகள் சேகரிக்கபதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

இப்படி முறையான புள்ளிவிபரங்கள் பதியப்படாததால் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியில் தெரிவதில்லை.

அதேபோல டெங்கு காய்ச்சல் பாதிப்பில் நடைபெறும் மரணங்களும் ஊடகங்கள் வாயிலாக தெரியப்படுத்தாததால் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்றி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...