கோவை : கோவையில் வீட்டில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்த 445 கிலோ கலப்பட டீத்தூளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உத்தரவின் பேரில் தொடர்ந்து உணவுப் பொருட்கள் கலப்படம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் குறிப்பாக கலப்பட டீத்தூள் தொடர்பாக திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், நேற்று போத்தனூர் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் காமராஜ் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், அப்பகுதியில் இருந்த டீ கடைக்கு டீத்தூள் விற்பனை செய்து வந்தார்.
அதைப் பார்த்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டீத்தூள் பாக்கெட்டில் முறையான பதிவுகள் ஏதும் குறிப்பிடாததை கண்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அது கலப்பட டீத்தூள் என தெரியவந்தது.
உடனடியாக அவர் கையில் இருந்த சுமார் 12 கிலோ கலப்பட டீத்தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையையடுத்து டீ தூள் விற்பனை செய்தவரின் வீட்டில் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் அவரின் வீட்டில் இருந்த 445 கிலோ அளவிலான கலப்பட டீத்தூள் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த டீ தூள் விற்பனை செய்த நபர் கணபதி பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன்(45) என தெரியவந்தது. இவர், டீ நிறம் அதிகமாக இருக்க கலர் கலந்து, வீட்டிலேயே டீத்தூளை தயாரித்து போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் கலப்பட டீத்தூளை சப்ளை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.