கோவையில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ; போலீசார் விசாரணை

கோவை : கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகளுடன் சேர்த்து சிசிடிவி பதிவுகளையும் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கோவை : கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரம் மற்றும் தங்க நகைகளுடன் சேர்த்து சிசிடிவி பதிவுகளையும் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆதித்ய குப்தா. இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சாய்பாபாகாலனி பகுதியில் வசித்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் கடந்த 16ஆம் தேதி தனது மனைவியுடன் தங்களது சொந்த ஊரான குஜராத் மாநிலத்திற்கு சென்று உள்ளார்.

இப்படி இருக்க இவரது வீட்டில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும் ஆதித்யா குப்தாவின் குழந்தைகளும் அவர்களது வீட்டில் தங்கியிருந்தனர்.



இந்தநிலையில் கடந்த 19 ஆம் தேதி ஆதித்யா குப்தாவின் வீட்டு அருகே அலாரம் சத்தம் கேட்டுள்ளது.

இந்த அலாரம் சத்தம் தொடர்பான தகவலும் ஆதித்ய குப்தாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சந்தேகம் அடைந்த ஆதித்யா குப்தா வீடு திரும்பினார். பின்னர் அவர் பீரோவை சோதனையிட்டபோது வைர மோதிரம், ஒரு தங்க செயின், 2.5 லட்சம் ரொக்கம் மற்றும் வெளிநாடு பணம் 1000 என பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர் சாய்பாபாகாலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோல கொள்ளையர்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் பதிவான டி.வி.ஆர் ஐயும் எடுத்துச் சென்றதால் போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் போலீசார் இந்த சம்பவத்தில் வீட்டில் இருப்பவர்கள் உதவியுடன் தான் கொள்ளை நடைபெற்று இருக்கும் என்ற கோணத்தில் பணியாளர்கள் 8 பேரையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...