கோவை : இந்தியாவில் முதல் முறையாக இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி சாய உற்பத்தி செய்யும் தொழிநுட்ப கருவியை அமைத்துள்ள கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் ரசயானமற்ற சாய ஆலைகளை ஏற்படுத்த மரங்களின் இடுபொருட்களை கொண்டு சாயங்களை உருவாக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண்மை சார்ந்த பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி மூலம் பேராசிரியர்கள் வெளிபடுத்தி வருகின்றனர். தமிழ்நாடு வேளாண்பல்கலை கழகத்தின் கீழ் செயல்படும் இந்த கல்லூரியில் தற்போது ரசாயனங்களை தவிர்த்து முற்றிலும் இயற்கை முறையில் மரங்கள்,பூக்கள் மூலம் கிடைக்கும் இடுபொருட்களை பயண்படுத்தி சாயங்கள் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து அதனை இன்று ஆலைகளின் பிரதிநிதிகளுக்கும் விவசாயிகளுக்கும் அறிமுகபடுத்தியுள்ளது.

இந்தியாவில் ஜவுளித்துறையில் துணிகளுக்கு சாயம் போடுவதற்காக மூலப்பொருட்களும் திரவியங்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனை இந்தியாவில் உற்பத்தி செய்ய தொழில்நுட்பமும் மூலப்பொருட்களும் கிடைக்காமல் இருந்தது. தற்போது இதனை இந்தியாவிலேயே உருவாக்க புதிய முயற்சியாக மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அதனை கண்டு பிடித்து பயண்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

பேராசியர் குமரன் தலைமையில் வனக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்ச்சியில் வேளாண் பல்கலை கழக துனை வேந்தர் குமார் மற்றும் தமிழக வேளாண் வர்த்தக பிரிவு ஆணையாளர் ஆகியோர் கலந்துகொண்டு இதனை அறிமுகம் செய்து வைத்தனர். இந்த நிகழ்வில் சாய பட்டறை உரிமையாளர்கள்,இறக்குமதியாளர்கள் மற்றும் அதனை பயன்படுத்தும் நெசவாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் தற்போது ஏற்படுத்தபட்டுள்ள இந்த திட்டம் மூலம் இயற்கை சாய தயாரிப்பு அவற்றை பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கபட்டது. மேலும் தேக்கு, வெப்பாலை,தைலம்,சவுக்கு என 15 வகையான மரங்கள் அதன் மூலம் கிடைக்கும் இலை ,பட்டை மற்றும் பூக்களை கொண்டு முற்றிலும் இயற்கையாக கிடைக்கும்பொருட்களை கொண்டு இதனை உருவாக்கும் வகையில் 33லட்சம் ரூபாயில் புதிய இயந்திரமும் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனை இன்று பயணபாட்டிற்காக திறக்கபட்டது, மூலப்பொருட்கள் கொண்டு வந்து இந்த இயந்திரத்தை பயண்படுத்திகொள்ளவும் அறிவுறுத்தபட்டுள்ளது.
ரசாயங்களை தவிர்த்து முற்றிலும் இயற்கையான பொருட்களை கொண்டு உடலுக்கு பாதிப்பில்லாத வகையில் உருவாக்கப்படும் இதுமாதிரியான சாயங்களை உருவாக்க இடுபொருட்கள் அதிக அளவில் உருவாக்க மரம் வளர்க்க விவசாயிகளுக்கு அரசு மூலம் மானியம் வழங்கவும் திட்டமிடபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும், கல்லூரி வளாகத்தில் இயற்கை சாயங்களை பயன்படுத்தி உருவாக்கபட்ட ஆடைகள் கண்காட்சியும் நடைபெற்றது.