நீலகிாி : நீலகிாி மாவட்டம் கோத்தகிாி அருகே ஒரே நாளில் வெவ்வேறு சம்பவத்தில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விரு கொலைகளையும் செய்த நபர்களும் கொலை செய்த போது குடிபோதையில் இருந்தனர் என்பதும், தொடர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தனது மனைவி மற்றும் பெற்றோர்களை துன்புறுத்தி வந்துள்ளனர், என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீலகிாி : நீலகிாி மாவட்டம் கோத்தகிாி அருகே ஒரே நாளில் வெவ்வேறு சம்பவத்தில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விரு கொலைகளையும் செய்த நபர்களும் கொலை செய்த போது குடிபோதையில் இருந்தனர் என்பதும், தொடர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தனது மனைவி மற்றும் பெற்றோர்களை துன்புறுத்தி வந்துள்ளனர், என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீலகிாி மாவட்டம் கோத்தகிாி அருகே உள்ள கீழ் கோத்தகிாி அண்ணா நகரை பகுதியை சேர்ந்த விசாலாட்சி (66), இவர் தேனாடு பஞ்சாயத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை இவரது அண்ணன் மகன் மூர்த்தி (45) இவருடன் தங்கியுள்ளார்.
மூர்த்திக்கு திருமணமாகி ஒரு மனைவி இறந்து விட்டார். மூர்த்தி எந்நேரமும் குடிபோதையில் இருப்பதால் அவருடைய இரண்டாவது மனைவியும் இவரது நடவடிக்கை பிடிக்காமல் பிரிந்து தன் பெற்றோா் வீட்டிற்கே சென்றுவிட்டாா்.
இந்த நிலையில், நேற்று குடிபோதையில் இருந்த அவர், விசாலாட்சியை பலமாக தாக்கியுள்ளார். அதில் அவா் பலத்த காயம் அடைந்து இறந்துவிட்டார். இந்த சம்பவத்தை தற்கொலையாக மாற்ற வீட்டுக்குள்ளேயே பிணத்தை தீயிட்டு கொள்ளுதியுள்ளார்.
வீட்லிருந்து அதிகளவில் புகை வந்ததால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாா் மூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
இதேபோல், மற்றொரு சம்பவத்தில் கீழ்கோத்தகிரி அருகே நீர்கண்டி பகுதியை சேர்ந்த பாண்டியன் (80) அவரது மகன் சின்னபாண்டி (40 ) குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா். இதனால் அவருக்கும் அவரது தந்தைக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. குடிபோதையில் தினந்தோறும் வீட்டில் பிரச்சனை செய்து வருவதால் இவரது மனைவி கொடுமை தாங்காமல் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மேலும், சின்ன பாண்டியின் தாய் இவரது கொடுமை தாங்காமல் மகள் வீட்டுக்கு சென்று உள்ளார்.
நேற்றிரவு குடிபோதையில் வந்த சின்னப்பாண்டி வயதானவர் என்றும் பாராமல் தந்தையே கொடூரமாக தாக்கி இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளாா்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சோலுர்மட்டம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்த பின்பு காவல்துறையினர் உடலை கைப்பற்றி கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து சின்ன பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.