நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அவலாஞ்சி அணை முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில், அணை திறக்கப்பட உள்ளதாகவும், கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்ட அணை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள 12 அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள பைக்காரா, கிளன்மார்கன், முக்கூர்த்தி அணைகள் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து அணை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், அவலாஞ்சி அணை முழு கொள்ளளவான 171 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணையை திறந்து இரண்டு மதகுகளில் படி படியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக குந்தா மின்வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக குந்தா, பில்லூர் போன்ற பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.