விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்து இன்னமும் முடிவு எடுக்கவில்லை - பிரேமலதா விஜயகாந்த் திருப்பூரில் பேட்டி

திருப்பூர் : அதிமுக கூட்டணியில் இருந்தாலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவினர் விஜயகாந்தை சந்தித்து பேசியதன் பிறகே தேர்தல் குறித்து முடிவு எடுக்கப்படும், என திருப்பூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று திருப்பூரில் பேட்டியளித்தார்.

திருப்பூர் : அதிமுக கூட்டணியில் இருந்தாலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவினர் விஜயகாந்தை சந்தித்து பேசியதன் பிறகே தேர்தல் குறித்து முடிவு எடுக்கப்படும், என திருப்பூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று திருப்பூரில் பேட்டியளித்தார். 

தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் அவர்களின் நண்பரான திருப்பூரை சேர்ந்த லிங்க்ஸ் சவுகத் அலி அவர்கள் இன்று உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடலுக்கு மரியாதை செலுத்த தேமுதிக சார்பில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், "லிங்ஸ் அவர்களின் மறைவு விஜயகாந்த்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு தேமுதிக ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாகவும், இருப்பினும் தற்போது தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அதிமுகவினர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட பின்பு, தேமுதிக தனது முடிவினை அறிவிக்கும்" என தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...