நீலகிரி : மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண தினந்தோறும் ஆயிரக்கண்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, பைக்காரா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்ல வாடகை கார் இயங்கி வருகின்றன.

வாடகை கார் தொழிலை நம்பி ஏராளமானோர் இருந்து வரும் நிலையில் சமீப காலங்களாக உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை சுற்றுலா வழிகாட்டி என்று கூறி ஏமாற்றி வருவதாகவும், அதில் சிலர் பெரிய டிராவல்ஸ்களுக்கு சொந்தமான வேன்கள் மற்றும் பஸ்களில் கமிசன் தொகையை பெற்று கொண்டு அனுப்பி வைப்பதாகவும் புகார் எழுந்து வருகிறது.
அவ்வாறு பெரிய வேன்களில் சுற்றுலா பயணிகளை; அனுப்புவதால் சிறிய வாடகை கார் தொழில் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது என வாடகை கார் ஓட்டுனர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் சுற்றுலா வழிகாட்டி என்று கூறி சுற்றுலா பயணிகளை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உதகையில் உள்ள மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்திற்கு ஏராமான வாடகை கார் ஓட்டுனர்கள் இன்று வந்து புகார் அளித்தனர்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.