குன்னூரில் தனியார் பள்ளி ஆசிரியர் சிறுவனை தாக்கியதில் காதில் ரத்தம் வந்ததால் பெற்றோர் புகார்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னுார் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருபவர் சாதிக் இவரது மகன் சாகின் (5) இவர் பெட்போர்டு பகுதியில் இயங்கி வரும் கிங்ஸ் கிட்ஸ் பிரைமரி அண்ட் நர்சரி என்ற தனியார் பள்ளியில் UKG படித்து வருகிறார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னுார் ரெய்லி காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருபவர் சாதிக் இவரது மகன் சாகின் (5) இவர் பெட்போர்டு பகுதியில் இயங்கி வரும் கிங்ஸ் கிட்ஸ் பிரைமரி அண்ட் நர்சரி என்ற தனியார் பள்ளியில் UKG படித்து வருகிறார். 



இந்நிலையில், இன்று அப்பள்ளியின் வகுப்பாசிரியர் வெண்டி அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கும் பென்சில்களை வழங்கியுள்ளார். இதனை உடைக்காமல் திருப்ப கொடுக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. ஆனால், சாகினுக்கு காெடுத்த பென்சில் ஏற்கனவே உடைந்துள்ளதாக சிறுவன் வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளார். 

இதனால் வகுப்பாசிரியர் வெண்டி அச்சிறுவனை கன்னத்தில் அடித்துள்ளார். இதில் மாணவன் காதில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. பின்பு, பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுவன் பள்ளியில் நடந்ததை சொல்லி காது வலிப்பதாக கூறியுள்ளான், உடனடியாக குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சையாக உதகை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். பின்பு, சிறுவன் கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டான்.

இது குறித்து மேல் குன்னுார் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நிர்வாக தரப்பு வகுப்பாசிரியர் வெண்டியை பள்ளியில் இருந்து தற்காலிக இடை நீக்கம் செய்துள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...