குன்னூரில் தன்னார்வ அமைப்பு மற்றும் காவல்துறையினர் இணைந்து சாலையை புதுப்பித்தனர்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு அலுவலர்கள் நிறைந்துள்ள சாலையை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க தாமதப்படுத்தியதால் தாற்காலிகமாக, எக்ஸ்னோரா அமைப்பு மற்றும் காவல்துறையினர் இணைந்து சாலையை புதுப்பித்தனர்.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு அலுவலர்கள் நிறைந்துள்ள சாலையை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க தாமதப்படுத்தியதால் தாற்காலிகமாக, எக்ஸ்னோரா அமைப்பு மற்றும் காவல்துறையினர் இணைந்து சாலையை புதுப்பித்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தபால், சார்நிலைக் கருவூலம், நீதிமன்றம், சார்பதிவாளர் அலுவலகம், மருத்துவமனை பள்ளிகள், காவல்நிலையம், தாலுக்கா அலுவலகம் உள்ளிட்டவை நிறைந்து காணப்படும் நீதிமன்ற சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. 

இந்த சாலையில் வாகனத்தை இயக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்படுவது வழக்கமானதாக இருந்தது. இதனைத் தாெடர்ந்து இந்த சாலையை புதுப்பித்துதர, பல்வேறு அமைப்புகள் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.



பணிகள் துவங்க தொடர்ந்து தாமதமானதால் நீலகிரி எக்ஸ்னாேரா அமைப்புடன், காவல் துறையினரும் இணைந்து தற்காலிகமாக இன்று சாலையை புதுப்பிக்கும் பணியை மேற்காெண்டனர். 



இதி்ல் காவல் ஆய்வாளர், அண்ணாதுரை தலைமையில் சிறப்பு காவல் ஆய்வாளர்கள் விஸ்வநாதன், ரவி, கிருஷ்ணமூர்த்தி, எக்ஸ்னாேரா அமைப்பின் நீலகிரி மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில், அதன் செயலாளர் ராமகிருஷ்ணன், அனைத்து லியாபாரிகள் சங்கசெயலாளர் இயாகத் அலி உள்ளிட்டாேர் கலந்து காெண்டு இந்த சாலை சீரமைக்கப்பட்டது. 

விரைவில் நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த சாலை முழுமையாக புதுப்பிக்கப்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் காேரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...