கோவை : கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகரித்துவரும் கொசுக்களால் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை மாநகரில் மொத்தம் 15 காவல் நிலையங்கள் உள்ளது. இந்த 15 காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, மதுவிலக்கு பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. இதோடு, மகளிர் காவல் நிலையங்கள் கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம் மத்திய காவல் நிலையம் என மூன்று காவல் நிலையங்கள் உள்ளது.

இதில் குறிப்பாக காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் மத்திய காவல் காவல் நிலையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான மற்றும் கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சினைகள் தொடர்பான புகார்களும் இந்த காவல் நிலையத்திற்கு அதிக அளவில் வருகிறது. இதனால், தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த காவல் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இப்படி, காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பலர் கொசுக்கடிகளை வாங்கிக்கொண்டு முகம் சுளித்தபடி தங்களின் புகார் தொடர்பான விவகாரங்களுக்காக காத்திருக்கின்றனர்.
புகார் கொடுக்க வந்த இடத்தில் நோய்களை வாங்கிச் செல்லும் அவலம் உருவாகிறது எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே, கொசுக்களால் மலேரியா, சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு விஷக்காய்ச்சல்கள் பரவி வந்த நிலையில் தற்போது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் முறையாக அரசு அலுவலகங்களில் குறிப்பாக பொதுமக்கள் கூடும் இடங்களில் கொசு மருந்து அடிக்காததால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் உருவாக காரணியாக அமைகிறது என்று பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக புகார் அளிக்க வந்த புகார்தாரர் ஒருவரிடம் பேசியபோது:
நாங்கள் எங்களின் குடும்ப விவகாரம் தொடர்பாக ஒரு புகார் அளிக்க சமீபத்தில் காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் மத்திய காவல் நிலையத்திற்கு
வந்திருந்தோம்.
மதியம் சுமார் இரண்டு மணி அளவில் இருந்து இரவு 7 மணி வரை காத்திருந்தோம்.
அப்படி காத்திருந்தபோது கொசுத்தொல்லை அதிகளவில் இருந்தது. இந்த இடத்தை விட்டு உடனடியாக செல்ல வேண்டும் என்பதைப்போல கொசுக்கள் கடித்துக் கொண்டிருந்தது.
ஆகவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த காவல் நிலையத்தில் கொசு மருந்து உடனடியாக அடிக்க வேண்டும்.
அதேபோல இந்த காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்களும் கொசுக்கடியால் பெரும் சிரமம் அடைகின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் இலைதழைகளை எரித்து கொசுக்களை ஓட்ட முயற்சிக்கின்றனர். ஆனால் கொசுக்கள் ஓய்ந்தபாடில்லை, என தெரிவித்தார்.