"கோவையில் முழுமையாக பிளாஸ்டிக் ஒழிப்பு வந்ததாக உணர முடியவில்லை", தமிழ்நாடு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : தமிழக அரசு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து, அதற்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அரசுத்துறை அதிகாரிகளுக்கு ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும், அபராதம் விதிக்கவும், தக்க உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போதுவரை கோவை மாவட்டத்தில் இன்னும் முழுமையாக பிளாஸ்டிக் ஒழிப்பு வந்ததாக உணர முடியவில்லை, என தமிழ்நாடு விவசாயிகள் அமைப்புத் தலைவர், சு.ராமசாமி தெரிவித்தார்.


கோவை : தமிழக அரசு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து, அதற்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அரசுத்துறை அதிகாரிகளுக்கு ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும், அபராதம் விதிக்கவும், தக்க உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போதுவரை கோவை மாவட்டத்தில் இன்னும் முழுமையாக பிளாஸ்டிக் ஒழிப்பு வந்ததாக உணர முடியவில்லை, என தமிழ்நாடு விவசாயிகள் அமைப்புத் தலைவர், சு.ராமசாமி தெரிவித்தார். 



இது குறித்து இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சார்பாக மனு ஒன்றை கொடுத்தார். அம்மனுவில், அவர் உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்களில் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற உத்தரவு இருந்தும் தொடர்ந்து தின்பண்டங்கள், ஷாம்பு, வாட்டர் பாட்டில், பாக்கு, சுண்ணாம்பு மற்றும் அனைத்து வகையான அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை அடைத்து வரும் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியிலும் பயன்பாடும் தொடர்ந்து வருகிறது என சுட்டிக் காட்டினார். 



இதனால், பொதுமக்கள் பயன்படுத்தியதற்குப் பிறகு வெளியேறும் பிளாஸ்டிக் கழிவு பொருட்களால் நீர் நிலைகளான ஏரி, குளம்,.குட்டைகளில், வாய்க்கால் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவைகள் அதிக அளவில் தேங்கி உள்ளதாக மனுவில் தெரிவித்து இருந்தனர்.

மேலும், இதனை துாய்மைப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் மாநகராட்சி,நகராட்சி, ஊராட்சி ஆகிய துறைகள் ஒரு பக்கம் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்துச் சென்று மற்றொரு இடத்தில்  குவித்து பின் பிளாஸ்டிக் பொருட்களை பெரும்பாலான இடங்களில் தீ வைத்து எரித்து அழித்து வருகிறார்கள். இதற்காக அரசாங்கத்திற்கு பல லட்சம் ரூபாய் விரையமாகிறது என தெரிவித்தார்.

இதனால் மண், காற்று போன்றவைகள் மாசுபட்டு சுற்றுசூழல் கடுமையாக பாதிப்படைவதாகவும் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள், நிலங்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பைகளை சாப்பிடுவதால் கால்நடைகளுக்கு அஜீரண கோளாறுகள் ஏற்பட்டு இறப்பிற்கு வழிவகை ஏற்படுகிறது என குற்றம் சாட்டினர்.

கர்நாடக மாநிலத்தைப் போல் முற்றிலும் படிப்படியாக பிளாஸ்டிக் ஒழிப்பை நடைமுறைப்படுத்த தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் ஒழிப்பை முழுமையாக கண்காணித்து விவசாயிகளையும், பொது மக்களையும் பாதுகாக்க வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...