கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு ஊழியர்களுக்கு முறையான சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு இன்று அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்:
மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 151 ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகவும் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்ததாரர்கள் முறையான ஊதியம் தருவது இல்லை என தெரிவித்தனர்.
குறைந்தபட்ச ஊதியமாக ரூ.400 கூலியாக வழங்க வேண்டும், ஆனால் அவர்கள் தற்போது பெண்களுக்கு ரூ.190ம், ஆண்களுக்கு ரூ.230 ம் வழங்குவதாக குற்றம் சாட்டினர்.

மேலும் இ.எஸ்.ஐ,பி.எப் போன்றவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.