"தன்னை ஒரு வருடத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமித்தால் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பேன்" என சமூக ஆர்வலர் ஆட்சியரிடம் மனு

கோவை : கோவை வெள்ளலூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சக்திவேல் மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணியிடம் தன்னை ஒரு வருடத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமித்தால் சம்பளமின்றி ஆட்சி பணி மேற்கொண்டு லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பேன், என கூறி மனு அளித்தார்.

கோவை : கோவை வெள்ளலூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சக்திவேல் மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணியிடம் தன்னை ஒரு வருடத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமித்தால் சம்பளமின்றி ஆட்சி பணி மேற்கொண்டு லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பேன், என கூறி மனு அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்:

கோவை மாவட்டத்தில் அனைத்து அரசாங்க அலுவலங்களில் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிகம் வசூலிப்பதாகவும், லஞ்சம் பெறுவதாக கூறினார். கேபிள் டிவி கட்டணம், மதுபான கடை, முதியோர் உதவி தொகை பெற என பல்வேறு வகையில் லஞ்சம் பெறபடுவதாகவும் வெள்ளலூர் பேரூராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தகவல் அறிக்கை கேட்டால் ஏளனமாக பார்ப்பதாகவும் அங்கு வரும் பொதுமக்களை மோசமாக நடத்துவதாக தெரிவித்தார். 

எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர் தன் அதிகாரத்தின் கீழ் தன்னை ஒரு வருடம் ஆட்சி தலைவராக நியமித்தால் சம்பளம் பெறாமல் பணி செய்து லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பேன் எனவும் எனவே ஆட்சியர் தன்னை ஒரு வருட காலம் ஆட்சித்தலைவராக பணியாற்ற உத்தரவு பிறபிக்க வேண்டும் என மனு அளித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...