கோவை : கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் சென்னையை தலைமையிடமாக கொண்டு ஏக்ஸண்ட் அகாடமி என்ற நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
கோவை : கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் சென்னையை தலைமையிடமாக கொண்டு ஏக்ஸண்ட் அகாடமி என்ற நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
முறையாக வகுப்புகள் நடத்தாமல் பல இலட்ச ரூபாய் மோசடி செய்ததாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
சம்பந்தப்பட்ட நீட் பயிற்சி மையத்தில் 15 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு மாணவ, மாணவிகளிடம் ரூபாய் 55 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களாக இந்த கோச்சிங் செண்டர் அடிக்கடி விடுமுறை விடுவதும், முறையாக மாணவ, மாணவிகளுக்கு கோச்சிங் கொடுப்பதும் இல்லை என கூறப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு இந்த கோச்சிங் செண்டரில் பயின்ற மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்ததால், அடுத்தாண்டு தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வந்தனர். இந்நிலையில் நீட் பயிற்சி மையத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை, எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அந்நிறுவன பொது மேலாளர் முகமது சதாம் உசேன் மற்றும் கோவை கிளை மேலாளர் ராஜேஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டுமெனவும் அவர்கள் தெரிவித்தனர்.