திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் திருப்பூர் அன்பு இல்லம் என்ற பெயரில் ஆதரவற்ற மாணவர்கள் தங்கி பயிலும் விவேகானந்த குருகுலம் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை அறுபதுக்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகள் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அன்பு இல்லத்தின் நிறுவனர் ராஜசேகர் என்பவர் மாணவர்களிடம் தகாத முறையில் நடப்பதாக திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு பெற்றோர் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து, அதிகாலை நேரத்தில் பள்ளி வளாகத்தினுள் அதிரடியாக நுழைந்த அதிகாரிகள் அங்கு பயிலும் அறுபத்து இரண்டு மாணவர்களை வேறு இடத்திற்கு மாற்றினர். இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பெருமாநல்லூர் போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் ராஜசேகரை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.