செப்டிக் டேங்கிற்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து இறந்த காட்டெருமை; வனத்துறையினர் வர தாமதமானதால் இறந்ததாக குற்றச்சாட்டு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள மிளிதேன் கிராமத்தில் செப்டிக் டேங்கிற்காக வெட்டப்பட்ட குழியில் காட்டெருமை விழுந்த தகவல் காெடுத்து ஒரு மணிநேரத்திற்கு மேலாகியும் வனத்துறையினர் வராததால் காட்டெருமை சற்று முன் இறந்தது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள மிளிதேன் கிராமத்தில் செப்டிக் டேங்கிற்காக வெட்டப்பட்ட குழியில் காட்டெருமை விழுந்த தகவல் காெடுத்து ஒரு மணிநேரத்திற்கு மேலாகியும் வனத்துறையினர் வராததால் காட்டெருமை சற்று முன் இறந்தது. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டெருமை, கரடி, மான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அவ்வப்போது நகரப்பகுதிகளில் வருவது வழக்கம்.

இந்நிலையில், இன்று காலை மிளிதேன் கிராமத்தில் செப்டிக் டேங்கிற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற ஊர் மக்கள் காட்டெருமை ஒன்று குழிக்குள் உயிருக்கு போராடி கொண்டிருந்ததை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

ஆனால், ஒரு மணி நேரம் ஆகியும் அங்கு வனத்துறையினர வராததால், அந்த காடெருமை மயங்கியது. அதனால் மீண்டும் வனத்துறையினரை தொடர்பு கொண்ட போது, அந்த பகுதி கட்டபெட்டு வனப்பகுதி எல்லைக்குள் சேரும் என்றும் அவர்களுக்கு அழைக்கும்படி தெரிவித்துள்ளனர்.

இருவரில் யார் வந்து இந்த காட்டெருமையை காப்பாற்றுவது என்பதில் தாெடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்ததால் வெகுநேரம் உயிருக்கு பாேராடிய காட்டெருமை பரிதாபமாக இறந்தது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...