கோவை சிங்காநல்லூர் அருகே பல வருடங்களாக கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் கைது

கோவை : கோவை சிங்காநல்லூர் அருகே பல வருடங்களாக மறைமுகமாக கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை : கோவை சிங்காநல்லூர் அருகே பல வருடங்களாக மறைமுகமாக கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதைக்கு அதிக அளவில் அடிமையாகி வருகின்றனர்.

இப்படியிருக்க கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட போலீசாரும் கோவை மாநகர போலீசாரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையாளர்களை தடுக்கும் நோக்கில் கண்காணிப்புகளில் ஈடுபட்டு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் நோக்கில் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசாரும் அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று, ஒண்டிப்புதூர் பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக சிங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனீஸ்வரன் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் காசி பாண்டியன் மற்றும் தலைமை காவலர் சுகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் கஞ்சா விற்பனையாளர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இதையடுத்து சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை 

மேற்கொண்ட போது விசாரணையில் அவர் கஞ்சா விற்பனையாளர் என தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில் அவர் கோவை, சூர்யா நகரை சேர்ந்த சேட்டு என்ற ஐயப்பன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...