கோவை : தமிழக அளவில் குழந்தைப்பருவ உடல் பருமனில் கோவை முன்னிலை வகிப்பதை தடுக்க உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு அவசியம் என்ற நோக்கத்தில் கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையின் சார்பில் விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது.
கோவை : தமிழக அளவில் குழந்தைப்பருவ உடல் பருமனில் கோவை முன்னிலை வகிப்பதை தடுக்க உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு அவசியம் என்ற நோக்கத்தில் கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையின் சார்பில் விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது.
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு காரணங்களால் உடல் பருமன் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த உடல்பருமனானது பல நோய்களுக்கும் காரணியாக இருக்கிறது, இதனால் உடல்பருமனை குறைக்க
சுகாதாரத்துறை சார்பிலும் மருத்துவமனைகள் சார்பிலும் தொடர்ந்து விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் வளர் சிதை அறுவை சிகிச்சை துறை சார்பில் தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை பிஎஸ்ஜி செவிலியர் கல்லூரி மாணவர்கள் சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள பாரதி பார்க்கில் உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகத்தை நடத்தினர்.

வித்தியாசமான உடைகளை அணிந்து முகத்தில் வண்ணங்களையும் கைகளில் உரைகளையும் அணிந்து பாடல்கள் மூலமும் நடனங்கள் மூலமும் உடல்பருமன் ஒரு நோய் என்றும், அது பல நோய்களுக்கும் வழிவகுக்கும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அதேபோல, தமிழகம் உடல்பருமனில் ஐந்தாம் இடத்தில் உள்ளதாகவும் கோவையில் குழந்தை பருவ உடல் பருமன் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதாகவும் உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பாலமுருகன் பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பாரதி பார்க்கில் இருந்த பொதுமக்கள் மாணவர்களின் விழிப்புணர்வு வீதி நாடகத்தை பாராட்டி கவுரவித்தனர்.