கோவை : காட்டு யானைகளை தூப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி தந்தங்களை கடத்தி வியாபாரம் செய்து வந்த கடத்தல்காரனை மேட்டுப்பாளையத்தில் வனத்துறையால் கைது செய்யபட்டான்.

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் உள்ள காட்டு யானைகளை ஒரு மர்ம கும்பல் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடி தந்தங்களை கடத்தி வந்தது. குறிப்பாக, மேட்டுப்பாளையம், சிறுமுகை, தேனி, கூடலூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் இந்த வேட்டை கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி யானைகளை வேட்டையாடி வந்தது.
மேலும், தமிழகம் மட்டுமின்றி கேரளா காடுகளிலும் அந்த கும்பல் யானைகளை வேட்டையாடி வந்தது. இதனையடுத்து, வனத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சிறப்பு கவனம் எடுத்து வனத்துறை விசாரனை நடத்தி வந்ததில் தேனி மாவட்டம் வருசநாடு சேர்ந்த சிங்கம் (45), குபேந்திரன் (42) ஆகியோரை கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, விசாரனையில் கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த பாபு என்கிற செட்டியார் (40) என்பவர் தூன்டுதலின் பேரில் துப்பாக்கியால் யானைகளை வேட்டையாடி தந்தங்களை அவருக்கு விற்றது தெரியவந்தது.

இதையடுத்து முக்கிய குற்றவாளியான பாபுவை நான்கு வருடங்களாக வனத்துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், அவர் ஏற்கனவே இருந்த வழக்கு ஒன்றிக்காக மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஆஜராகி விட்டு வெளியே வந்த போது பாபுவை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் 10 க்கும் மேற்பட்ட யானைகளை வேட்டையாடியதும் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனத்தில் மட்டும் நான்கு யானைகளை துப்பாக்கியால் சுட்டு அதன் தந்தங்களை எடுத்து டெல்லிக்கு கொண்டு சென்று வியாபாரம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து 7பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்பு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.