திருப்பூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

திருப்பூர் : திருப்பூர் நல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) வந்துள்ளது. அதில், அந்த பெண்ணின் ஆபாச படத்தை வைத்திருப்பதாகவும், ரூ.5 லட்சம் தர வேண்டும் என்றும், மறுத்தால் இணையதளத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளதாக.கூறப்படுகிறது.

திருப்பூர் : திருப்பூர் நல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து ஒரு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) வந்துள்ளது. அதில், அந்த பெண்ணின் ஆபாச படத்தை வைத்திருப்பதாகவும், ரூ.5 லட்சம் தர வேண்டும் என்றும், மறுத்தால் இணையதளத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளதாக.கூறப்படுகிறது. 



இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண், மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, குறுஞ்செய்தி வந்த மொபைல் எண்ணை வைத்து தனிப்படை போலீசார் சேலத்தை சேர்ந்த நரேஷ் (27) என்பரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கபட்டுள்ளதாகவும், அந்த திருமணத்திற்கு போதிய பணம் இல்லாததால் முகநூலில் இருந்து செல்போன் எண்ணை எடுத்து பணம் பறிப்பதற்காக இது போன்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார். 

பின்னர், இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் அவர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...