கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் உள்ள தேநீர்க் கடையில் திடீர் தீ விபத்து ; தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சியால் தீ அணைக்கப்பட்டது

கோவை : உக்கடம் பேருந்து நிலையத்தில் உள்ள தேநீர்க் கடையில் சிலிண்டர் கசிவினால் ஏற்பட்ட திடீர் தீவிபத்து தீயணைப்பு வீரர்கள் முயற்சியால் அணைக்கப்பட்டது.


கோவை : உக்கடம் பேருந்து நிலையத்தில் உள்ள தேநீர்க் கடையில் சிலிண்டர் கசிவினால் ஏற்பட்ட திடீர் தீவிபத்து தீயணைப்பு வீரர்கள் முயற்சியால் அணைக்கப்பட்டது.

கோவை உக்கடம் பேருந்து நிலையத்திற்கு மாநகருக்குள் செல்லும் பேருந்துகளும் அதேபோல பொள்ளாச்சி மற்றும் கேரளா போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் வந்து செல்கின்றன.

இதனால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர்.

இதற்காக உக்கடம் பேருந்து நிலையத்தில் ஆவின் தேனீர் கடை உட்பட பல்வேறு தேனீர் கடைகள் உள்ளன.



இந்த நிலையில் இன்று பேருந்து நிலையத்திலுள்ள முகமது உபைஸ் என்பவருக்கு சொந்தமான தேனீர் கடையில் சிலிண்டர் கசிவினால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தகவலறிந்த உக்கடம் போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



பின்னர் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 20 நிமிடத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர்.

இந்த திடீர் தீ விபத்து தொடர்பாக போலீசாரும் தீயணைப்பு துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள டீக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...