திருப்பூர் : திருப்பூர் அரிசிக் கடை வீதியில் இன்று காலை சரக்கு வாகனத்தில் இருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் பாலித்தீன் பைகள் இறக்குவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது.

இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்ற மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் அங்கு பாபுலால் என்பவருக்கு சொந்தமான கடை உட்பட மூன்று கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலித்தீன் பைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து சுமார் ஒரு டன் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ததற்காக அபராதமும் விதித்தனர்.