கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நகர பகுதிகளில் 24 மணி நேரமும் தடையில்லா குடிநீர் வழங்கும் வகையில் ஜிக்கா திட்டமும் அறிமுகப்படுத்தபட்டது.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து இரண்டு ஆண்டு ஆகியும் நகர பகுதிகளில் குடிநீர் பிரச்சனை என்பது அடிக்கடி ஏற்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடூர், மாகாதேவபுரம், மணிநகர் உள்ளிட்ட நகராட்சியின் பல பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
குறிப்பாக, நடூர் பகுதியில் 20 நாட்கள் ஆகியும் குடிநீர் வழங்காதது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்தும், உடனடியாக தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வலியுறுத்திம் கோசங்களை எழுப்பிய பொதுமக்கள் ஒரு மணி நேரமாக போராட்டம் நடத்தினர். இதனால் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து மேட்டுப்பாளையம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடிநீர் வழங்கல் குழாய் உடைப்பு மற்றும் நீரேற்று நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வுகானப்பட்டு வருவதாகவும், தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடபட்டது.
பொதுமக்களின் மறியல் போராட்டம் காரணமாக அன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கபட்டது.