திருப்பூர் : திருப்பூரில் 4 வயது சிறுமியிடம் பனியன் தொழிலாளி ஒருவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதை அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் : திருப்பூரில் 4 வயது சிறுமியிடம் பனியன் தொழிலாளி ஒருவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதை அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி, இவரது வீட்டதுகே குடியிருந்து வரும் கந்தசாமி (34) பனியன் தொழிலாளி. இதனிடையே, இன்று காலை முதலே குடிபோதையில் வீட்டில் இருந்து வந்த கந்தசாமி, தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
விளையாடி கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் சிறுமியை தேடி வர, சிறுமியின் அலரல் சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் கந்தசாமி வீட்டிற்குள் சென்று பார்த்த போது சிறுமியை கந்தாசாமி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்துள்ளது.

கடும் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொது மக்கள் கந்தசாமியை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் கந்தசாமியை கைது செய்தனர்.
நான்கு வயது சிறுமியை பலாத்காரம்.செய்தவரை பொது மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.