தமிழக அரசை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியதாக இளைஞர் கைது ; கைதுக்கான முகாந்திரம் இல்லாததால் நீதிபதி சிறைப்படுத்த மறுப்பு

கோவை : கருமத்தம்பட்டியில் தமிழக அரசை கவிழ்ப்பதற்கு சதித்திட்டம் தீட்டியதாக பூபாலன் என்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யபட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கருமத்தம்பட்டியில் தமிழக அரசை கவிழ்ப்பதற்கு சதித்திட்டம் தீட்டியதாக பூபாலன் என்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யபட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னி ஆண்டவர் கோவில் மேம்பாலத்திற்கு கீழ் சந்தேகத்துக்கிடமான நபர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே ரோந்து வந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.இதையடுத்து அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

மேலும் போலீசார் அந்த இளைஞர் பெயர் பூபாலன் (31) என்றும் தமிழக அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டும் என்றும், அதேபோல ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என திட்டம் தீட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் 7(1)(a) குற்றவியல் நடைமுறைச் சட்டம் (criminal law amendment) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் சூலூர் நீதிபதி வேடியப்பன் வீட்டில் போலீசார் பூபாலனை நேற்று இரவு ஆஜர்படுத்தினர்.

முதல் தகவல் அறிக்கையில் கைது செய்வதற்கான முகாந்திரம் எதுவும் இல்லாததால் பூபாலனை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுத்து விட்டார்.

இதையடுத்து சூலூர் போலீசார் அவரை மீண்டும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...