கோவை : கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் பீடா கடையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் அதிகரித்து வரும் கஞ்சா போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட மற்றும் மாநகர காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் குறிப்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி வால்பாறை, அன்னூர், கருமத்தம் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வரும் கும்பல்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
அதேபோல வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் அதிக அளவில் கஞ்சா பயன்படுத்துவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதில் குறிப்பிட்ட சில கும்பல்கள் கஞ்சா பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையிலான ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர் ரத்தினகுமார், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அன்னூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சோதனை செய்ததில், வாகனத்தில் 2கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் பெயர் அக்ஷய் தாஸ் என்பதும், அன்னூர் அடுத்த கணேசபுரம் மாசக்கவுடன்பாளையம் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்ததும், ஓடிஸா மாநிலத்திலிருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, மனைவி மூலம் பீடா கடை என்ற பெயரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது.
இதேபோல் மாவட்டத்தில் பல வட மாநிலத்தவர்கள் மூலம் கஞ்சாவை சில்லறை விற்பனை செய்து வருவதாகவும் விசாரணையில் அக்ஷய் தாஸ் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து, அக்ஷய் தாஸ், அவரது மனைவி பிஜய் லட்சுமி தாஸ் ஆகிய இருவரைக் கைது செய்த அன்னூர் காவல்துறையினர், வீட்டில் மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 24 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த தம்பதியினருடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.