குடிமைப்பணி தேர்வில்‌ வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பே மூலதனம்‌ : காவல்‌ ஆணையர்‌ சுமித்‌ சரண்‌

கோவை : உலகிலேயே மிகக்கடினமான தேர்வான குடிமைப்பணி தேர்வில்‌ வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பே மூலதனம்‌ என்று கோவை மாநகரக்‌ காவல்‌ ஆணையர்‌ சுமித்‌ சரண்‌ தெரிவித்தார்.

கோவை : உலகிலேயே மிகக்கடினமான தேர்வான குடிமைப்பணி தேர்வில்‌ வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பே மூலதனம்‌ என்று கோவை மாநகரக்‌ காவல்‌ ஆணையர்‌ சுமித்‌ சரண்‌ தெரிவித்தார்.

காவல்துறை ஆணையர்‌ அலுவலக கூட்ட அரங்கில்‌ நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில்,‌ கோவை அரசு கலைக்‌கல்லூரி மற்றும்‌ கனகராஜ்‌ இலவச ஐ.ஏ.எஸ்‌. பமிற்சி வகுப்பு மாணவர்களிடம்‌ கோவை மாநகரக்‌ காவல்‌ ஆணையர்‌ சுமித்‌ சரண்‌ அவர்கள்‌ உரையாடினார்‌.



அப்போது அவர்‌ பேசுகையில், IAS, IPS, IFS போன்ற உயர்ந்த பதவிக்காக குடிமைப்பணி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை எழுதும்‌ மாணவர்கள்‌ தினந்தோறும்‌ செய்தித்தாள்கள்‌ வாசிக்கவேண்டும்‌, தொலைக்காட்சி சேனல்களின்‌ செய்திகளையும்‌ விவாதங்களையும்‌ தொடர்ந்து கவனிக்கவேண்டும்‌, குடிமைப்பணி தேர்வில்‌ ஏராளமான கேள்விகள்‌ நாட்டு நடப்புகள்‌ குறித்தே இருக்கின்றன என்றார்.

மேலும், குடிமைப்பணி தேர்வில்‌ முதல்நிலை தேர்வு, முதன்மைத்‌ தேர்வு மற்றும்‌ நேர்காணல்‌ என மூன்று நிலைகள்‌ உள்ளன. ஆனால்‌ மாணவர்கள்‌ மூன்று நிலைகளுக்கும்‌ ஒரே சமயத்தில்‌ படிக்கவேண்டும்‌. குடிமைப்பணி தேர்வில்‌ பாடத்திட்டம்‌ விசாலமானது. அரசியல்‌, பொருளாதாரம்‌, கலாச்சாரம்‌, விளையாட்டு, சுற்றுப்புறச்‌ சூழல்‌ என அனைத்து பாடங்களும்‌ உள்ளன. ஆகவே பல மாதங்களுக்குத் தொடர்ச்சியாக மாணவர்கள்‌ படிக்கவேண்டிவரும்‌, கவனச்சிதறல்‌ இருக்கக்கூடாது, உடல்நலத்தையும்‌, மனநலத்தையும்‌ மாணவர்கள்‌ பேணிப்பாதுகாக்க வேண்டும்‌ என்றார். நீண்டகாலம்‌ படிக்கவேண்டியுள்ளதால்‌ மனச்சிதறல்‌ மற்றும்‌ சோர்வு ஏற்படுவதைத்‌ தடுக்க மாணவர்கள்‌ நல்ல பொழுதுபோக்குகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்‌ என்று தெரிவித்தார்.



நூற்றுக்கணக்கான மாணவர்கள்‌ பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், அரசு கலைக்கல்லூரி அரசியல்‌ அறிவியல்‌ துறைத்தலைவர்‌ முனைவர்‌ பி. கனகராஜ்‌ மற்றும்‌ ஆர்‌.ரமேஷீ கிருஜ்ணன்‌, உதவி ஆணையர்‌, நுண்ணறிவுப்பிரிவு ஆகியோர்‌ மாணவர்களிடையே கலந்துரையாடினர்‌.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...