தடாகத்தில் செங்கல் சூளைகளுக்காக அதிக அளவில் மண் எடுப்பதை தடுக்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மனு

கோவை : தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளுக்காக அதிக அளவில் மண் எடுப்பதைத் தடுக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் புகார் அளித்தனர்.


கோவை : தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளுக்காக அதிக அளவில் மண் எடுப்பதைத் தடுக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் புகார் அளித்தனர்.

கோவை மாவட்டம் தடாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செங்கல்சூளைகளுக்காக அதிகளவில் மண் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனை தடுக்க வேண்டும் என விவசாயிகள் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் இன்று மீண்டும் மனு அளித்தனர்.

மனு அளித்த பின் பேட்டியளித்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால், செங்கல் சூளைகளுக்காக அதிக அளவில் மண் எடுப்பதைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதிப்பு, தடுப்பணைகள் பாதிப்பு, யானை வழித்தடங்கள் பாதிப்பு என அனைத்து பாதிப்புகளையும் மீண்டும் அதிகாரிகளிடம் விளக்கி இருப்பதாகவும், மண் எடுப்பதை தடுக்க வில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...