நீலகிரி : உதகை மார்க்கெட் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முற்பட்ட போது, நகராட்சி அதிகாரிகளிடம் கடையின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மார்கெட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீசார் பாதுகாப்புடன் 10க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

உதகை மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரப் பகுதிகளில் நடைபாதைகளில் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அகற்றி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மத்திய பேருந்து நிலையம் அருகில் சுமார் 8க்கும் மேற்பட்ட கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். மேலும், நகரப்பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதியில் சுமார் இருபது கடைகளில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் இன்று நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

பின்பு, கடையின் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் தங்களுக்குச் சரியான ரசீது உள்ளது எனவும் ஆகவே அந்த கடைகளை அகற்ற வேண்டாம், தாங்களாகவே எடுத்துக் கொள்வதோடு, கடைக்கு உண்டான ரசீதையும் தங்களிடம் காண்பித்து கடைகளை வைத்துக் கொள்கிறோம் என முறையிட்டனர். பின்பு இன்று மாலை வரை நேரம் தருமாறும் அதன்பின் தாங்களாகவே கடைகளை அப்புறப்படுத்தி விடுகிறோம் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த கடைகள் மட்டும் குறியீடு செய்யப்பட்டு மீதமுள்ள கடைகள் ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் மார்க்கெட் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.