நீலகிரியில் வாட்டர் ஏடிஎம்களை உபயோகிப்பது குறித்து விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க கோரிக்கை

நீலகிரி : நீலகிரியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏடிஎம்களில் எவ்வாறு தண்ணீர் எடுப்பது என்பது குறித்து அனைத்து மொழிகளிலும் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி : நீலகிரியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏடிஎம்களில் எவ்வாறு தண்ணீர் எடுப்பது என்பது குறித்து அனைத்து மொழிகளிலும் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, பிளாஸ்டிக் பைகள், டம்ப்ளர்கள், தட்டுகள் போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீரோடைகள், குடிநீர் ஆதாரங்களான அணைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசப்படுவதால் நீர் நிலைகள் மாசுபாட்டு வந்த நிலையில், இந்த பிளாஸ்டிக் பாட்டில்களுக்குத் தடை செய்ய பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 1 முதல் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

நாள்தோறும் பல மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் குடிநீர் பாட்டில்களை உபயோகிக்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தாமல் இருக்கவும் அவர் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வாட்டர் ஏடிஎம் மையங்கள் முக்கிய சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ்ட்ராக், பைக்கரா மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மாவட்டத்தில் மொத்தம் 77 இடங்களில் வாட்டர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.



இதில் 1 ரூபாய்க்கு 200 மி.லி, 2 ரூபாய்க்கு 400 மி.லி, 5 ரூபாய்க்கு 1 லிட்டர் தண்ணீரை தங்கள் கொண்டு வரும் பாத்திரங்களில் எடுத்துச் செல்லலாம். ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தண்ணீர் எப்படி பிடிப்பது என்பது தெரிவதில்லை.

இது ஒருபுறம் இருக்க அரசு மதுபான கடைகளில் இயங்கும் தனியார் பார்கள் தங்களுக்கு இந்த வாட்டர் எடிஎம் களை பயன்படுத்தி தண்ணீர் கொண்டு வந்து அதிக விலைக்கு விற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், வாட்டர் ஏடிஎம்களை தவறுதலாகப் பயன்படுத்தி, அத்துமீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



மேலும், வாட்டர் எடிஎம் மையங்கள் அருகில், அனைத்து மொழிகளிலும் விழிப்புணர்வு பதாகைகளை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சி வெற்றி பெற, விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...