கோவை : சாலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நான்கு இளைஞர்கள், இரு சக்கர வாகனத்தில் கோவையில் இருந்து லடாக் வரை 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்தை துவங்கினர்.

கோவை, சௌரிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜோஷ்வா (21), ஹரி பிரகாஷ் (21), சூலூரைச் சேர்ந்த இனியன் கபிலன் (23), சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுஜித்குமார் (26) ஆகிய நான்கு இளைஞர்கள் கோவையில் இருந்து லடாக் வரை 17 மாநிலங்களைக் கடந்து, சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கோவை பீளமேடு காவல் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட நான்கு இளைஞர்களும், 35 நாள்கள் பயணம் செய்து லடாக்கை சென்றடைய உள்ளனர். இவர்களது பயணத்தை இயற்கை அறக்கட்டளைத் தலைவர் வினோத், காவல் ஆய்வாளர் ஜோதி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் இயக்க வேண்டும், கார் ஓட்டும்போது, சீட் பெல்ட் அணிய வேண்டும், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது உள்ளிட்ட சாலைப் பாதுகாப்பையும், சுற்றுச்சூழலையும் வலியுறுத்தும் வகையில் பதாகைகளுடன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.