மேட்டுப்பாளையத்தில் வேளாண் காடுகளை அகில இந்திய அளவில் உருவாக்குவது குறித்த கருத்தரங்கம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகளை அகில இந்திய அளவில் உருவாக்குவது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்

கோவை : மேட்டுப்பாளையத்தில் தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகளை அகில இந்திய அளவில் உருவாக்குவது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செயல்படும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தொழிற்சாலை சார்ந்த வேளாண்க்காடுகளை அகில இந்திய அளவில் உருவாக்குவது தொடர்பாக வேளாண் அறிவியலாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. வனக்கல்லூரி பேராசிரியர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தமிழகம், கர்நாடகா, பஞ்சாப், அந்தமான், டெல்லி போன்ற மாநிலங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் கலந்து கொண்டனர்.



இந்த கருத்தரங்கில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரங்களை விவசாய விளைநிலங்களில் இருந்து உருவாக்கி தரிசு நிலங்களிலும் மர வளர்ப்பினை ஊக்குவிப்பதுடன் காடுகள் இன்றி தொழிற்சாலைகளுக்குத் தேவையானவற்றை பூர்த்தி செய்யும் வகையில் வேளாண் காடுகள் உருவாக்குவது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. மேலும், குறைந்த நீரினை பயன்படுத்தி வளரக்கூடிய மர வகைகளான மலைவேம்பு போன்ற மரங்களைக் கண்டறிந்து அதனை இந்திய அளவில் பரவலாக்குவதுடன் இதன் மூலம் விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டிய பொருட்களை உருவாக்கி அவர்களது லாபத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கிற்கு வருகை புரிந்திருந்த வேளாண் அறிவியலாளர்கள் எழுதிய புத்தகங்களை கோவை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் வெளியிட்டுப் பாராட்டினார். இந்த நிகழ்வின் போது தமிழகத்தில் மேட்டுப்பாளையம் வன கல்லூரி ஆராய்ச்சி பேராசிரியர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மலைவேம்பு மரங்களால் உருவாக்கப்பட்ட மதிப்புக் கூட்ட பொருட்களின் கண்காட்சியும் நடைபெற்றது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...