கோவை : மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஊதிய உயர்வு கோரி துப்புறவு பணியாளர்கள் வேலைகளைப் புறக்கணித்து, நகராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 100க்கும் மேற்பட்ட ஆண் பெண் துப்புறவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும், இந்த ஒப்பந்த பணியாளர்களே அன்றாடம் குப்பைகளை சேகரித்து அதனை அப்புறப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட குறைந்த அளவிலான ஊதியமே கொடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பெண்களுக்கு 190 ரூபாயும் ஆண்களுக்கு 230 ரூபாயும் அளிக்கபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் பெயரில், ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளர்களுக்கான கூலியை 400 ரூபாயாக உயர்த்திய பிறகும் அதனை வழங்காமல் நகராட்சி ஒப்பந்ததாரர் காலதாமதம் செய்வதாக கூறி, 100க்கும் மேற்பட்டோர் வேலைகளைப் புறக்கணித்துவிட்டு நகராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் அறிவித்த ஊதிய உயர்வான 400 ரூபாய் கூலியை வழங்க கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால், மேட்டுப்பாளையத்தில் அனைத்து பகுதிகளிலும் இன்று குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் இதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாததால் போராட்டம் தொடர்கிறது.