திருப்பூர் : திருப்பூர், பி.என். ரோடு, போயம்பாளையம், தெற்கு பிச்சம்பாளையம் பாரதிநகர், உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் என்று கூறி சொகுசு காரில் வந்த இரண்டு நபர்கள் பனியன் நிறுவனங்களில் பணம் கேட்டு மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது, பாரதிநகர் பகுதியிலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் ஆய்வு செய்வதாக கூறி வலுக்கட்டாயமாக பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அந்த பனியன் நிறுவன உரிமையாளர் இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசுக்கு தகவல் அளித்தார்.
இதனை அறிந்த மோசடி நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இதை அடுத்து சுதாரித்துக்கொண்ட கம்பெனி உரிமையாளர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு அவர்களை மடக்கி பிடித்து அனுப்பர்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் சிவகங்கையை சேர்ந்த குமார் (45) கன்னியாகுமரியை சேர்ந்த முருகன்(60) என்பது தெரியவந்தது.

மேலும், அவர்களிடமிருந்து ரூபாய் 84 ஆயிரம் ரொக்கம், இரண்டு செல்போன்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த அனுப்பர்பாளையம் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.