கோவை : ரத்தினபுரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதையடுத்து, குற்ற விசாரணை பிரிவு சட்டம் 107 பிரிவின் படி 200 நாட்கள் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் கவுதம் என்ற கருப்பு கவுதம்(25). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது.
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி குற்ற விசாரணை முறைச் சட்டம் 107 பிரிவின் படி, மாநகர காவல் துணை ஆணையரும், எக்ஸிகியூட்டிவ் மேஜிஸ்ட்ரேட்டுமான பாலாஜி சரவணன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அதிலிருந்து ஓராண்டுக்கு எந்த குற்றத்திலும் ஈடுபடக்கூடாது என அவரிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதி பெறப்பட்டது. ஆனால், கடந்த 5-ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் கவுதம் ரத்தினபுரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து சிறையில் இருந்து கடந்த 17-ம் தேதி கவுதம் வெளியே வந்தார்.
ஓராண்டுக்கு எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழியை மீறியதால், ரத்தினபுரி காவல்துறையினர், கவுதமை நேற்று மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர்.
உறுதிமொழியை மீறியதால், நேற்றிலிருந்து வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வரை 200 நாட்கள் கவுதமை சிறையில் அடைக்க துணை ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து கவுதம் நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க குற்ற விசாரணை முறைச் சட்டம் 107 பிரிவை பயன்படுத்தி குற்றவாளிகள் தொடர்ந்து மாநகர காவல் துறையால் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.